அரச்சலூர் அருகே பதுக்கியுள்ள சிறுத்தையை பிடிக்க கூண்டுகள் அமைப்பு
சிறுத்தைக்காக வைக்கப்பட்டுள்ள கூண்டு
ஈரோடு மாவட்டம் அரச்சலூர் அருகேயுள்ள அட்டவணை அனுமன்பள்ளியில் கடந்த 14 ஆம் தேதி தோட்டத்தில் கட்டப்பட்டிருந்த மாட்டை மரம விலங்கு அடித்துக் கொன்றதாக கூறப்பட்டது.இதனையடுத்து வனத்துறையின் அப்பகுதியில் ஆய்வு செய்தபோது மாட்டை அடித்தது சிறுத்தை என்றும் இது தொடர்பாக தானியங்கு கேமராக்கள் அமைத்தும் சிறுத்தையை பிடிக்க கூண்டுகள் அமைத்தனர்.
அந்த பணிகளை அமைச்சர் முத்துசாமி, மாவட்ட ஆட்சியர் ராஜகோபால் சுன்கரா ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.அப்போது அமைச்சர் முத்துசாமி , அரச்சலூர் பகுதியில் சிறுத்தை நடமாட்டம் உறுதி செய்யப்பட்டு வனத்துறை மூலம் 13 இடங்களில் தானியங்கி கேமராக்களும், நான்கு இடங்களில் கூண்டுகளும் வைக்கப்பட்டுள்ளன.
மூன்று பேர் கொண்ட ஏழு குழுக்கள் வனத்துறை மூலம் அமைக்கப்பட்டு சிறுத்தை நடமாட்டத்தை கண்காணித்து வருகின்றனர்.வனப்பகுதி அருகில் உள்ள கிராமங்களில் விளக்குகள் எரிய விட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது