குழித்துறை கிராம அலுவலகம் முன்பு நின்ற புளியமரம் முறிந்தது.
குழித்துறை கிராம அலுவலகம் முன்பு நின்ற புளியமரம் முறிந்தது.
கன்னியாகுமரி மாவட்டம் குழித்துறையில் விளவங்கோடு அரசு மேல்நிலைப் பள்ளியி உள்ளது. இந்த பள்ளியின் பின்புறத்தில் கிராம நிர்வாக அலுவலகம் நூலகம் போன்றவை ஒரே வளாகத்தில் உள்ளது. இந்த வளாகத்தில் சுமார் 100 ஆண்டுகள் பழக்கம் உடைய புளிய மரமும் உள்ளது.
இந்த நிலையில் குழித்துறை, மார்த்தாண்டம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த மூன்று நாட்களாக பலத்த காற்று வீசி வருகிறது. இதில் இந்த புளிய மரத்தின் ஒரு பகுதி கொம்புகள் ஒடிந்து விழுந்தன.
இதில் நூலகத்தின் குடிநீர் டேங்க் மற்றும், பைப்புகள் சேதமடைந்தன. எனவே எஞ்சி நிற்கின்ற புளிய மரத்தின் கிளைகளை முறித்து அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்
Next Story