இருசக்கர வாகனத்தின் மீது,டாட்டா ஏசி வாகனம் மோதி காவலர் பலி
- இருசக்கர வாகனத்தின் மீது,டாட்டா ஏசி வாகனம் மோதி காவலர் பலி
- அச்சரப்பாக்கம் காவல் நிலையம்
ஒலக்கூர் அருகே இருசக்கர வாகனத்தின் மீது,டாட்டா ஏசி வாகனம் மோதி காவலர் பலி. இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணை.
செங்கல்பட்டு மாவட்டம்,அச்சிறுப்பாக்கம் காவல் நிலையத்தில், விழுப்புரம் மாவட்டம், கீழ்மண்ணுர் பகுதியைச் சேர்ந்த காவலராக பணிபுரிந்து வருபவர் மணிகண்டன் (வயது 42 )நேற்று முன் தினம் பணிக்கு இருசக்கர வாகனத்தில் வரும் பொழுது ஒலக்கூர் அருகே திருச்சியில் இருந்து சென்னை தேசிய நெடுஞ்சாலையில் இரு சக்கர வாகனம் மீது டாட்டா ஏசி வாகனம் மோதியதில் இவர் படுகாயம் அடைந்தார். இவர் சிகிச்சைக்காக மேல்மருவத்தூர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலன் இன்றி நேன்று மாலை உயிரிழந்தார். இந்த விபத்து சம்பந்தமாக ஒலக்கூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Next Story