மாவட்ட ஆட்சியர் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும் என கண்ணீர் மல்க பெண் செய்தியாளர்களுக்கு பேட்டி !
திருப்பத்தூர்
திருப்பத்தூர் மாவட்டம் மாவட்ட ஆட்சியர் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும் என கண்ணீர் மல்க பெண் செய்தியாளர்களுக்கு பேட்டி திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த முத்தம்பட்டி பகுதியை சேர்ந்த முருகானந்தன் மரம் ஏறும் தொழில் செய்து வந்தார். இவர் கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு தென்னை மரத்தின் மீது ஏறி உள்ளார் அப்போது திடீர் என ஏற்பட்ட வலிப்பு நோயால் மேலே இருந்து கீழே விழுந்தார்.
இவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர் அப்போது சிகிச்சை பலனின்றி முருகானந்தன் உயிரிழந்தார். அப்போது முருகானந்தனின் உடல் உறுப்புகள் தானம் வழங்கப்பட்டது இதனை அடுத்து இதற்கு முன்பிருந்த திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் முருகானந்தனின் இறுதிச் சடங்கில் கலந்து கொண்டு மலர் வளையம் வைத்து முருகானந்தன் குடும்பத்தின் ஏழ்மை நிலை அறிந்து வீட்டில் ஒருவருக்கு அரசு வேலை வழங்குவதாக கூறியுள்ளார்.
இந்த நிலையில் இதுவரை அரசு வேலை வழங்கவில்லை எனவும் மேலும் இரண்டு குழந்தைகளை வைத்து வாழ்வாதாரம் என்று தவித்து வருவதாகவும் எனவே முன்னாள் மாவட்ட ஆட்சியர் கூறியது போல் தனக்கு அரசு வேலை வழங்க வேண்டும் எனவும் திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்ப்பு கூட்டத்தில் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தார் மேலும் இதுகுறித்து செய்தியாளர்களிடம் கண்ணீர் மல்க பேட்டி அளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.