கொல்லங்கோடு அருகே தற்கொலைக்கு முயன்ற வாலிபர்

கொல்லங்கோடு அருகே தற்கொலைக்கு முயன்ற வாலிபர்
விசாரணை 
கொல்லங்கோடு அருகே தற்கொலைக்கு முயன்ற வாலிபர் - பெண் மீது பரபரப்பு புகார்
கன்னியாகுமரி மாவட்டம் கொல்லங்கோடு அருகே உள்ள காக்கவிளை பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணுக்கும், கேரளா நெய்யாற்றின்கரையை சேர்ந்த 27 வயதுடைய வாலிபர் ஒருவருக்கும் பழக்கம் ஏற்பட்டது. அந்த வாலிபர் பெண்ணுக்கு பண உதவி செய்துள்ளார். அந்த பெண் தனக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் இருப்பதை மறைத்து, வாலிபருடன் பழகி வந்துள்ளார். இந்த விவகாரம் அந்த வாலிபருக்கு தெரியவந்துள்ளது. இதனால் அந்த பெண்ணுடன் இருந்த தொடர்பை நிறுத்த நினைத்து, கொடுத்த பணத்தை அந்த வாலிபர் கேட்க தொடங்கினார். இதனால் இருவருக்கும் பிரிவு ஏற்பட்டது. இதை தொடர்ந்து அந்த வாலிபர் காக்க விளையில் உள்ள அந்தப் பெண்ணின் பாட்டி வீட்டுக்கு வந்து அந்தப் பெண் குறித்து விசாரித்தார். அதற்கு அந்த பெண்ணின் பாட்டி தனக்கு எதுவும் தெரியாது என்று கூறினார். இதனால் ஆத்திரமடைந்த அந்த வாலிபர் உனது பேத்தியை வரச் சொல் இல்லை என்றால் வீட்டின் முன் உள்ள மரத்தில் தூக்கு போட்டு சாவேன் என்று சொல்லி கூறியபடி கயிறை எடுத்து தூக்கில் தொங்க முயன்றார். உடனே அந்த மூதாட்டி போலீசுக்கு தகவல் தெரிவித்தார். போலீசார் விரைந்து சென்று அந்த வாலிபரை தடுத்து நிறுத்தி போலீஸ் நிலையத்தில் கொண்டு சென்று வாலிபரையும், பெண்ணையும் விசாரித்தனர். அப்போது அந்தப் பெண் பணம் எதுவும் வாங்கவில்லை என்று கூறினார். இதை அடுத்து இருவருக்கும் அறிவுரை கூறிய போலீசார் அனுப்பி வைத்தனர்.

Tags

Next Story