தனியார் பள்ளி வாகன கண்ணாடியை உடைத்த வாலிபர்
விசாரணை
சேலத்தில் விபத்து தகராறில் தனியார் பள்ளி வாகன கண்ணாடியை உடைத்த வாலிபரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சேலம் செட்டிச்சாவடி அண்ணா நகர் பகுதியை சேர்ந்தவர் சின்ன பையன். இவரது மகன் செல்வம் (வயது28). இவர் இன்று காலை ஒரு மோட்டார் சைக்கிளில் செட்டிச்சாவடி பகுதியில் வந்து கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த தனியார் பள்ளி வாகனம் செல்வம் ஓட்டி வந்த மோட்டார்சைக்கிள் மீது உரசியது. இதனால் அதிர்ச்சி அடைந்த செல்வம் இதுகுறித்து அந்த வாகனத்தின் டிரைவரிடம் கேட்டபோது இருவருக்கும் வாய் தகராறு ஏற்பட்டது . இதில் ஆத்திரமடைந்த செல்வம் தனியார் பள்ளி வாகனத்தின் கண்ணாடியை உடைத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்த தகவலின் பேரில் கன்னங்குறிச்சி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து செல்வத்திடம் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Next Story