வாணியம்பாடி அருகே வாலிபர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை
ரயில்
திருப்பத்தூர் மாவட்டம்.வாணியம்பாடி அடுத்த வளையாம்பட்டு பகுதியை சேர்ந்தவர் சங்கர் (35) கம்ப்யூட்டர் சர்வீஸ் சென்டரில் பணியாற்றி வரும் இவருக்கு திருமணம் ஆகி 12 ஆண்டுகள் ஆன நிலையில், இவருக்கு குழந்தை இல்லையென கூறப்படுகிறது,இதனால் சங்கர் மற்றும் அவரது மனைவியிடையே அடிக்கடி குடும்பத்தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.
இந்நிலையில் சங்கரின் மனைவி சங்கருடன் சண்டையிட்டு அவரது தாய் வீட்டிற்கு சென்றுள்ளார், இதனால் மனவிரக்த்தில் இருந்த சங்கர் வளையாம்பட்டு பகுதியில் விண்ணமங்கலம் - வாணியம்பாடி ரயில் நிலையங்களுக்கிடையேயான ரயில்வே தண்டவாளத்தில் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துக்கொண்டுள்ளார்.
பின்னர் இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த ஜோலார்பேட்டை ரயில்வே காவல்துறையினர் ரயில் முன் பாய்ந்து உயிரிழந்த சங்கரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, இச்சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்து விசாரணை மேற்க்கொண்டு வருகின்றனர்..