தாயார் கண்டித்ததால் தூக்கிட்டு வாலிபர் தற்கொலை

தாயார் கண்டித்ததால் தூக்கிட்டு வாலிபர் தற்கொலை

 தற்கொலை

நாகை மாவட்டம் திருமருகல் அருகே தாயார் கண்டித்ததால் தூக்கிட்டு வாலிபர் தற்கொலை
திருவாரூர் மாவட்டம் சேர்ந்தமங்கலம் ரோட்டு தெருவை சேர்ந்தவர் ராமதாஸ் மகன் மணிகண்டன் (வயது 24) கூலித்தொழிலாளி.இவர் திருமருகல் ஒன்றியம் அம்பல் மெயின் ரோடு பகுதியில் உள்ள தனது பெரியப்பாவின் நினைவு நாளிற்கு வந்து அம்பலில் தங்கி உள்ளார்.அங்கு குடித்துவிட்டு தகராறு செய்ததால் மணிகண்டனின் தாயார் அவரை கண்டித்து உள்ளார்.இதில் மனமுடைந்த மணிகண்டன் கடந்த 22-ம் தேதி வீட்டுக்கு அருகில் உள்ள கொட்டகையில் தூக்கிட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார்.இதனை அறிந்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு நன்னிலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.அங்கு முதலுதவி செய்யப்பட்டு திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்துள்ளார்.இந்த நிலையில் நேற்று முன்தினம் சிகிச்சை பலனின்றி மணிகண்டன் பரிதாபமாக உயிரிழந்தார்.இது குறித்த தகவல் அறிந்த திருக்கண்ணபுரம் போலீசார் மணிகண்டனின் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்விற்கு அனுப்பி வைத்தனர்.மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags

Next Story