அரசுபேருந்து மோதி வாலிபர் உயிரிழப்பு
விபத்து நடந்த இடம்
அரியலூர் புறவழிசாலையில் இருசக்கர வாகனம் மீது அரசு பேருந்து மோதிய விபத்தில் தனியார் நிறுவன துணை மேலாளர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார்.
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் வட்டம் அதிகாரம் கிராமத்தை சேர்ந்தவர் பாலன். இவர் அரியலூர் அருகே அல்லிநகரத்தில் உள்ள பேவர்ப்ளாக் கம்பெனியில் துணை மேலாளராக பணியாற்றி வந்துள்ளார். இந்நிலையில் பாலன் தனது இருசக்கர வாகனத்தில் அரியலூர் புறவழிசாலையில் அல்லிநகரம் நோக்கி சென்று கொண்டிருக்கும்போது பெரம்பலூரில் இருந்து அரியலூர் நோக்கி வந்த அரசு பேருந்து மோதியதில் பாலன் சம்பவ இடத்திலேயே உயிர் இழந்தார். இதனையறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று போக்குவரத்தை சரிசெய்தனர். பின்னர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரியலூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இச்சம்பவம் குறித்து கயர்லாபாத் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Next Story