விபத்தில் வாலிபர் உயிரிழப்பு

டூவீலரில் வேகமாக சென்ற வாலிபர் வாகனம் கட்டுப்பாட்டை இழந்து கீழே விழுந்து உயிரிழந்தார்.

கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி தாலுகா, அம்மாபட்டி அருகே உள்ள சங்கரனாம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் பழனிச்சாமி மகன் சண்முகம் வயது 37. இவர் மார்ச் 14ஆம் தேதி மதியம் 3 மணி அளவில், ஈசனத்தத்திலிருந்து வேடசந்தூர் செல்லும் சாலையில் ,அவருக்கு சொந்தமான டூவீலரில் சென்று கொண்டு இருந்தார். இவரது வாகனம் வள்ளப்பம்பட்டி பிரிவு சின்னதுரை தோட்டம் அருகே வேகமாக சென்றபோது, வாகனம் கட்டுப்பாட்டை இழந்து கீழே விழுந்து விபத்து ஏற்பட்டது.

இந்த விபத்தில் பலத்த காயமடைந்த அவரை மீட்டு, தனியார் ஆம்புலன்ஸ் மூலம், கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு சண்முகத்தை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இந்த சம்பவம் அறிந்த, சண்முகத்தின் சகோதரர் ஜெகநாதன், இது குறித்து காவல்துறையினருக்கு அளித்த புகாரின் பேரில், சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர், உயிரிழந்த சண்முகத்தின் உடலை உடற்கூறு ஆய்வுக்காக கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் அரவக்குறிச்சி காவல்துறையினர்.

Tags

Next Story