திருப்பூரில் சாலை தடுப்புச்சுவரில் மோட்டார் சைக்கிள் மோதி வாலிபர் பலி!

திருப்பூரில் சாலை தடுப்புச்சுவரில் மோட்டார் சைக்கிள் மோதி வாலிபர் பலி!

 பலி

திருப்பூரில் சாலை தடுப்புச்சுவரில் மோட்டார் சைக்கிள் மோதி வாலிபர் சம்பவ இடத்திலேயே பலியானார்.

திருப்பூரில் சாலை தடுப்புச் சுவரில் மோட்டார் சைக்கிள் மோதி வாலிபர் பலி. திருப்பூர் ராக்கியாபாளையம் பட்டத்தரசி அம்மன் கோவில் வீதியைச் சேர்ந்த மாதவன் மகன் சந்தோஷ் (வயது 18).இவர் நல்லூர் பகுதியில் உள்ள பேக்கரியில் வேலை பார்த்து வந்தார்.

நேற்று மதிய உணவு இடைவேளையில் மோட்டார் சைக்கிளில் சாலையில் சென்று கொண்டிருந்தபோது நல்லூர் அருகே சாலையில் நடுவில் வைத்திருந்த மையத் தடுப்பு சுவரில் (டிவைடர் )எதிர்பாராத விதமாக மோதி கீழே விழுந்துள்ளார். இதில் சந்தோஷ் தலை மற்றும் கைகால்களில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த நல்லூர் போலீசார் சந்தோஷம் உடலை மீட்டு திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு பிரேதபரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் விபத்து குறித்து நல்லூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Read MoreRead Less
Next Story