வாகன விபத்தில் வாலிபர் பலி
விபத்து
திருச்சி மாவட்டம் திருவெரும்பூர் தாலுகா கீழக்கல்கண்டார்கோட்டை அம்பேத்கர் தெருவை சேர்ந்தவர் 29 வயதான விவேக்குமார்.இவர் நேற்று இரவு மண்ணச்சநல்லூரில் இருந்து திருச்சி நோக்கி தனது மோட்டார் பைக்கில் சென்று கொண்டிருந்தார். அப்போது உத்தமர்கோயில் மேம்பாலத்தில் சென்று கொண்டிருந்த போது எதிரே வந்த சரக்கு வாகனம் மோட்டார் பைக் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் படுகாயமடைந்த விவேக்குமாரை மீட்டு தனியார் ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு பின்னர் மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு தொடர் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று காலை உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து தவலறிந்த கொள்ளிடம் போலீசார் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்விற்க்காக திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். பின்னர் இந்த விபத்து குறித்து கொள்ளிடம் போலீசார் வழக்கு பதிவு விசாரணை செய்து வருகின்றனர்.