சேலம் புதிய பஸ் நிலையம் அருகே மேம்பாலத்தில் இருந்து குதித்த வாலிபரால் பரபரப்பு

சேலம் புதிய பஸ் நிலையம் அருகே மேம்பாலத்தில் இருந்து குதித்த வாலிபரால் பரபரப்பு

மேம்பாலத்தில் இருந்து குதித்த வாலிபர் 

சேலம் புதிய பஸ் நிலையம் அருகே மேம்பாலத்தில் இருந்து குதித்த வாலிபரால் பரபரப்பு. அரசு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை.
சேலம் புதிய பஸ் நிலையம் அருகே உள்ள மேம்பாலத்தில் நேற்று மதியம் சுமார் 30 வயதுடைய வாலிபர் ஒருவர் நடந்து சென்றார். அப்போது அவர் திடீரென மேம்பாலத்தின் தடுப்பு சுவரில் ஏறி கீழே குதித்தார். இதை பார்த்து அந்த வழியாக சென்றவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். கீழே விழுந்ததில் அந்த வாலிபருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். மேலும் இதுகுறித்து தகவல் கிடைத்ததும் சம்பவ இடத்துக்கு போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினர். இதில் அவர் மனநிலை பாதிக்கப்பட்டவர் என்று கூறப்படுகிறது. மேலும் அவர் யார்?, எந்த ஊரை சேர்ந்தவர்? என்பது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Tags

Next Story