திருப்பூர் ரயில்வே நடை மேம்பாலத்தில் இருந்து குதித்த வாலிபரால் பரபரப்பு

திருப்பூர் ரயில்வே நடை மேம்பாலத்தில் இருந்து குதித்த வாலிபரால் பரபரப்பு

கருகியவர்

திருப்பூர் ரயில்வே நடை மேம்பாலத்தில் இருந்து வடமாநில தொழிலாளி குதித்த வாலிபரால் பரபரப்பு ஏற்பட்டது.

திருப்பூர் ரயில் நிலையத்தில் நேற்று மதியம் தன்பாத்தில் இருந்து கேரள மாநிலம் ஆலப்புழாவுக்கு செல்லும் ரயில் வந்து நின்றது. அதில் இருந்து இறங்கிய வடமாநில இளைஞர் திடீரென்று நடைமேடை அருகே காத்திருந்த வடமாநில தொழிலாளியின் 4 வயது சிறுமியை தூக்கி கீழே வீசி எறிந்தார்.

இதில் அந்த சிறுமி காயமடைந்தார். அங்கிருந்தவர்கள் அந்த வாலிபரை துரத்தினார்கள். அதற்குள் தண்டவாளத்தில் குதித்து கற்களை எடுத்து தனது தலையில் மாறி, மாறி அடித்தார்.

அவர் தலையில் ரத்தம் வழிந்தது. அவர் அருகே செல்ல பயணிகள் அச்சம் அடைந்தனர். இதை கவனித்த ரயில்வே போலீசார் விரைந்து ஓடி வந்து அவரை பிடிக்க முயன்றனர். அதற்குள் அந்த வாலிபர் நடைமேம்பாலத்துக்கு மேல் ஏறி ஓடினார்.

பின்னர் பாலத்துக்கு மேல் ஏறி கீழே குதித்தார். அப்போது உயர் அழுத்த மின்கம்பியில் அவருடைய உடல் உரசியதில் அவருடைய ஆடை தீப்பற்றி கருகின. மின்சாரம் தாக்கி தூக்கிவீசப்பட்ட அந்த வாலிபரின் உடல் கருகி உயிருக்கு போராடினார்.

வடமாநில வாலிபர் உடனடியாக ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு அந்த வாலிபரை மீட்டு திருப்பூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. திருப்பூர் ரயில்வே போலீஸ் எஸ்.ஐ பாபு மற்றும் போலீசார் நடத்திய விசாரணையில்,

அந்த வாலிபர் ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியை சேர்ந்த பிரகாஷ் ஓரான்( 30) என்பது தெரியவந்தது. அவர் தனது தம்பியுடன் சொந்த ஊரில் இருந்து புறப்பட்டு கேரளாவுக்கு வேலைக்காக சென்றுள்ளார்.

திருப்பூர் ரயில் நிலையம் வந்ததும் அவர் ரயிலில் இருந்து கீழே குதித்தார். அவருடன் தம்பியும் இறங்கி பிடிப்பதற்குள் அவர் சிறுமியை தாக்கி மேம்பாலத்தில் இருந்து குதித்தது தெரியவந்தது. பிரகாஷ் ஓரானுக்கு சில நேரங்களில் இவ்வாறு மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் போல் இருப்பார் என்று அவருடைய தம்பி கூறியுள்ளார்.

தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவத்தால் திருப்பூர் ரயில் நிலையத்தில் பெரும்பரபரப்பு ஏற்பட்டது.

Tags

Next Story