நாகை அருகே கஞ்சா விற்ற வாலிபர் கைது

நாகை அருகே கஞ்சா விற்ற வாலிபர் கைது

நாகை அருகே கஞ்சா விற்ற வாலிபர் கைது 

நாகை அருகே கஞ்சா விற்பனை செய்த வாலிபர் கைது. ஒரு கிலோ 100 கிராம் கஞ்சா பறிமுதல்.
நாகை அருகே கஞ்சா விற்ற வாலிபர் கைது ஒரு கிலோ 100 கிராம் கஞ்சா பறிமுதல். நாகை மாவட்டத்தில் கஞ்சா கடத்தல் மற்றும் விற்பனையை தடுக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஹர்ஷ்சிங் உத்தரவின் பேரில் தீவிர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த நிலையில் நாகை நகர காவல் போலீஸ் சரகத்திற்கு உட்பட்ட அக்கரைகுளம் கீழ்க்கரை பகுதியில் இன்ஸ்பெக்டர் ராஜேஷ் கண்ணா மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்குள்ள பிள்ளையார் கோயில் அருகே சந்தேகத்திற்கு இடமான வயல் நின்று கொண்டிருந்த ஒருவரை பிடித்து விசாரணை நடத்தினர் விசாரணையில் அவர் மதுரை மாவட்டம் மேல மணி பகுதியை சேர்ந்த ஜெகநாதன் மகன் அஜித் வயது 25 என்பதும் இவர் தற்சமயம் நாடார் தெருவில் வசித்து வந்ததும் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதும் தெரியவந்தது இது தொடர்பாக அஜித்தை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்து விற்பனைக்கு வைத்திருந்த ஒரு கிலோ 100 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

Tags

Next Story