நள்ளிரவில் மூதாட்டிகளிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட வாலிபர் கைது
கைது செய்யப்பட்ட ரவிக்குமார்
சேலம் கோரிமேடு அருகே 75 வயது மூதாட்டி வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது மதுபோதையில் இருந்த வாலிபர் ஒருவர் மூதாட்டியிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த மூதாட்டி கூச்சல் போடவே அக்கம் பக்கத்தினர் அந்த நபரை எச்சரித்து அனுப்பினர். தொடர்ந்து நள்ளிரவில் அந்த வாலிபர் வீட்டின் அருகே திண்ணையில் படுத்து தூங்கி கொண்டு இருந்த 65 வயது மூதாட்டிக்கு முத்தம் கொடுத்து சில்மிஷத்தில் ஈடுபட்டுள்ளார்.
அப்போது அவர் கூச்சல் போடவே வெளியே வந்த அவரது மருமகளையும் அந்த நபர் கட்டிபிடித்து சில்மிஷம் செய்ய முயன்று உள்ளார். இது குறித்து தகவல் அறிந்து வந்த பொதுமக்கள் அந்த வாலிபரை சரமாரியாக தாக்கி கன்னங்குறிச்சி போலீசில் ஒப்படைத்தனர். இதுகுறித்து கன்னங்குறிச்சி போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) தவமணி விசாரணை நடத்தினார். அந்த வாலிபர் கோரிமேடு ஜல்லிகாடு பகுதியைச் சேர்ந்த ரவிக்குமார் (25) என்பதும், கட்டிட தொழிலாளி என்பதும், அவர் மதுபோதையில் இருப்பதும் தெரியவந்தது. இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிந்து மூதாட்டிகள் மற்றும் பெண்ணிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட வாலிபரை கைது செய்தனர்.