புகைப்படம் எடுத்ததில் தகராறு வாலிபர் மீது தாக்குதல்

புகைப்படம் எடுத்ததில் தகராறு வாலிபர் மீது தாக்குதல்

தாக்குதல் 

புகைப்படம் எடுத்த தகராறில் வாலிபரை கட்டையால் தாக்குதல் நடத்திய 4 பேரில் ஒருவர் கைது செய்யப்பட்டார். மற்ற 3 பேரையும் போலீசார் தேடி வருகின்றனர்.
சேலம் சூரமங்கலம் அருகேயுள்ள மல்லமூப்பம்பட்டி பகுதியை சேர்ந்தவர் ராஜ்குமார் (28). இவர் தனது தாயுடன் அந்த பகுதியில் உள்ள அய்யனார் கோயிலுக்கு சென்றார். அப்போது அங்கு வந்த உறவினர்களுடன் புகைப்படம் எடுத்தனர். அந்த நேரத்தில் அங்கு வந்த அய்யம்பெருமாம்பட்டியை சேர்ந்த பிரபு, ரஞ்ஜித், மோகன், கவுதம் ஆகிய 4 பேரும் இங்கு புகைப்படம் எடுக்க கூடாது என தெரிவித்தனர். அப்போது அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த பிரபு தரப்பினர் ராஜ்குமாரை கட்டையால் சரமாரியாக தாக்கினர். இதில் அவருக்கு படுகாயம் ஏற்பட்டது. அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இது பற்றிய புகாரின் பேரில் சூரமங்கலம் போலீசார் விசாரணை நடத்தினர். தொடர்ந்து ரஞ்ஜித் (24) மீது வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர். தலைமறைவாக உள்ள மற்ற 3 பேரையும் போலீசார் தேடி வருகின்றனர்.

Tags

Read MoreRead Less
Next Story