சேலம் அருகே 21 கிலோ கஞ்சாவுடன் வாலிபர் சிக்கினார்
சேலம் அருகே 21 கிலோ கஞ்சாவுடன் வாலிபர் சிக்கினார்
சேலம் அருகே 21 கிலோ கஞ்சாவுடன் வாலிபர் சிக்கினார்
சேலம் அருகே 21 கிலோ கஞ்சா வைத்திருந்த வாலிபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஒடிசா மாநிலத்தில் இருந்து சேலம் வழியாக வாழப்பாடிக்கு கஞ்சா கடத்தப்படுவதாக மாவட்ட போதை பொருள் தடுப்பு பிரிவு போலீஸ் உயர் அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாபு சுரேஷ்குமார் தலைமையில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சரவணன் மற்றும் போலீசார் நேற்று வாழப்பாடி அருகே முத்தம்பட்டி சோதனை சாவடி பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த வாலிபர் ஒருவரை சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரணை நடத்தினர். அதில் அவர் ஆத்தூர் அருகே தளவாய்பட்டியை சேர்ந்த பிரபு (வயது 32) என்பது தெரியவந்தது. மேலும் அவர் வைத்திருந்த பையை சோதனையிட்ட போது அதில் 21 கிலோ கஞ்சா மறைத்து வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்ததுடன் பிரபுவையும் கைது செய்து விசாரணை நடத்தினர். அப்போது சேலத்தை சேர்ந்த தமிழ்செல்வன் என்பவர், ஒடிசா மாநிலம் நிஷாப்பூரை சேர்ந்த புனியா என்பவரிடம் இருந்து கஞ்சாவை விலைக்கு வாங்கி அவற்றை ரெயிலில் கடத்தி வந்துள்ளார். அந்த கஞ்சாவை பிரபு மூலம் விற்பனை செய்ய திட்டமிட்டிருந்ததும் போலீசார் விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து கஞ்சா கடத்தல் கும்பலில் தலைமறைவாக உள்ளவர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
Tags
Next Story