பூச்சிமருந்து மனுகொடுக்க வந்த வாலிபர்

பூச்சிமருந்து மனுகொடுக்க வந்த வாலிபர்

பூச்சி மருந்து அருந்தி வந்த வாலிபர்


பூச்சி மருந்து அருந்தியவாறு தேனி ஆட்சியர் அலுவலகத்திற்கு மனு கொடுக்க வந்த வாலிபரால் பரபரப்பு ஏற்பட்டது.

விபத்தால் எரிந்து போன ஆட்டோவிற்கு காப்பீட்டு நிறுவனம் நிதி வழங்காத நிலையில், ஆட்டோவிற்கு கடன் வாங்கிய நிதி நிறுவனம் பணம் செலுத்தச் சொல்லி நெருக்கடி கொடுப்பதால் மன உளைச்சல் அடைந்த தேனி பொம்மை கவுண்டன் பட்டி பாலன் நகரை சேர்ந்த 48 வயது நிரம்பிய கண்ணன் என்பவர் பூச்சி மருந்து அருந்தியவாறு தேனி ஆட்சியர் அலுவலகத்தில் மனு கொடுக்க வந்தார்.

பூச்சி மருந்து அருந்திய விபரமறிந்து, பாதுகாப்பு பணியில் இருந்த போலீஸார் கண்ணனை மீட்டு, ஆம்புலன்ஸ் மூலம் தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Tags

Next Story