மயங்கி விழுந்த வாலிபர் பலி

மயங்கி விழுந்த வாலிபர் பலி

பைல் படம்

சேலத்தில் குடிப்பழக்கம் காரணமாக மயங்கி விழுந்த வாலிபர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
சேலம் டவுன் பெரியார் தெருவை சேர்ந்தவர் மணி மாறன் (29). இவருக்கு மது குடிக்கும் பழக்கம் உள்ளது. கடந்த மாதம் 18ம் தேதி இவர் வீட்டில் திடீரென மயங்கி விழுந்தார். அப்போது அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. குடும்பத்தினர் அவரை மீட்டு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி அவர் நேற்று உயிரிழந்தார். இது பற்றி டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story