கஞ்சா கடத்தி வந்த வாலிபர் கைது : 10 கிலோ கஞ்சா பறிமுதல்
ஆந்திராவில் இருந்து கஞ்சா பொட்டலங்களை கடத்தி வந்த வாலிபர் கைது : 10 கிலோ கஞ்சா பறிமுதல்
வடமாநில தொழிலாளர்களிடம் விற்பனை செய்ய ஆந்திராவில் இருந்து கஞ்சா பொட்டலங்களை கடத்தி வந்த வாலிபர் கைது : 10 கிலோ கஞ்சா பறிமுதல் ஆந்திர மாநிலம் ஸ்ரீகாகுளம் மாவட்டம் ராமாபுரம் பகுதியை சேர்ந்தவர் சுனில் (21) இவர் ஓசூர் அருகே உள்ள கோனேரிப்பள்ளி என்ற இடத்தில் இயங்கி வரும் தனியார் கிரைனைட் கம்பெனியில் கிரைனைட் கற்களை அறுக்கும் வேலை செய்து வருகிறார். சுனில் ஆந்திர மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து கஞ்சா பொட்டலங்களை கடத்தி வந்து ஓசூர் பகுதியில் வேலை செய்து வரும் வடமாநில தொழிலாளர்களிடம் விற்பனை செய்து வருவதாக ஓசூர் மதுவிலக்கு அமல் பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அதன் அடிப்படையில் போலீசார் நேற்று இரவு சுனில் தங்கி இருக்கும் அறைக்கு சென்று திடீர் சோதனை மேற்கொண்டனர். அப்போது அவரது இருசக்கர வாகனத்தில் 10 கிலோ எடையுள்ள கஞ்சா பொட்டலங்கள் இருந்தது தெரியவந்தது. இதனையடுத்து கஞ்சா பொட்டலங்களை பறிமுதல் செய்த ஓசூர் மதுவிலக்கு அமல் பிரிவு போலீசார் கஞ்சா கடத்திய குற்றத்திற்காக வாலிபர் சுனிலை கைது செய்தனர். ஆந்திர மாநிலத்தில் இருந்து கஞ்சா பொட்டலங்களை ரயில் வழியாக ஜோலார்பேட்டைக்கு எடுத்து வந்து அங்கிருந்து இருசக்கர வாகனத்தில் கஞ்சாவை ஓசூர் பகுதிக்கு கொண்டு வரும் சுனில் இங்கு வட மாநில வாலிபர்களுக்கு தொடர்ந்து கஞ்சாவை விற்பனை செய்து வந்துள்ளது தெரிய வந்தது.
Tags
Next Story