கஞ்சா விற்ற வாலிபர் கைது!
பைல் படம்
ஊட்டி மத்திய பேருந்து நிலையத்தில் கஞ்சா விற்ற வாலிபரை போலீஸார் கைது செய்தனர்.
நீலகிரி மாவட்டம் ஊட்டி மத்திய காவல் துணை ஆய்வாளர் மகேந்திரன் தலைமையிலான போலீஸார் நேற்றிரவு ஊட்டி மத்திய பேருந்து நிலையம் அருகில் உள்ள மின்வாரிய ரவுண்டானா பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சந்தேகத்திற்கு இடமான வகையில் சுற்றித்திரிந்த வாலிபரை பிடித்து விசாரித்தில், அவர் முன்னுக்குப் பின் முரணாக பேசினார். அவரிடம் சோதனை செய்தபோது பையில் கஞ்சா இருந்தது தெரிய வந்தது. விசாரணையில் அவர் மேற்கு வங்காளத்தை சேர்ந்த தினீஷ் தமாங்க் (23) என்பதும், ஊட்டி வண்டிச்சோலை பகுதியில் தங்கி கூலி வேலை செய்து கொண்டே, இரவு நேரங்களில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டிருந்ததும் தெரியவந்தது. இதைத்தொடர்ந்து போலீஸார் அவரை கைது செய்து அவரிடம் இருந்து 600 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
Next Story