லாட்டரி சீட்டு விற்ற வாலிபர் கைது.

லாட்டரி சீட்டு விற்ற வாலிபர் கைது.

காவல்நிலையம் 

சமயபுரம் கடைவீதியில் அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டு விற்பனை செய்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
திருச்சி மாவட்டம் சமயபுரம் கடைவீதி பகுதியில் சமயபுரம் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சமயபுரம் கடைவீதி பகுதியில் அரசால் தடை செய்யப்பட்ட மூன்றாம் நம்பர் லாட்டரி சீட்டு விற்பனை செய்து கொண்டிருந்த வாலிபரை பிடித்து விசாரணை செய்தனர். விசாரணையில் சமயபுரம் அண்ணா நகரை சேர்ந்த 33 வயதான ரவிக்குமார் என தெரிய வந்தது. பின்னர் அவர் மீது வழக்கு பதிவு செய்த சமயபுரம் போலீசார் அவரை கைது செய்தனர்.

Tags

Next Story