நீதிபதி குடியிருப்புக்குள் அத்துமீறி நுழைய முயன்ற வாலிபர் கைது!

நீதிபதி குடியிருப்புக்குள் அத்துமீறி நுழைய முயன்ற வாலிபர் கைது!

காவல்துறை விசாரணை


வேலூர் கலெக்டர் பங்களா அருகே உள்ள நீதிபதி குடியிருப்புக்குள் அத்துமீறி நுழைய முயன்ற வாலிபர் கைது செய்யப்பட்டார்.
வேலூர் அண்ணாசாலையில் கலெக்டர் பங்களா அருகே நீதிபதிகள் குடியிருப்பு உள்ளது. இங்கு 24 மணி நேரமும் சுழற்சி முறையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் வாலிபர் ஒருவர் நீதிபதி குடியிருப்பு அருகே வந்து நீதிபதியை பார்க்கவேண்டும் என அங்கிருந்த போலீசாரிடம் கூறினார். அந்த வாலிபர் மதுபோதையில் இருந்ததாக கூறப்படுகிறது. அதனால் பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அவரை உள்ளே அனுமதிக்கவில்லை.இதனால் ஆத்திரமடைந்த அந்த வாலிபர் கற்களை எடுத்து போலீசாரை தாக்க முயன்றார். பின்னர் கொலை மிரட்டல் விடுத்து உள்ளே செல்ல முயன்றார். ஆனால் அவரை உள்ளே செல்லவிடாமல் போலீசார் மடக்கிப்பிடித்தனர். பின்னர் இதுகுறித்து பாகாயம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து வாலிபரை பிடித்து விசாரித்தனர்.விசாரணையில் அவர் வேலூர் கன்சால்பேட்டை இந்திராநகரை சேர்ந்த சிவசக்தி (26) என்பது தெரியவந்தது. இதையடுத்து பாதுகாப்பு பணியில் இருந்த போலீஸ்காரர் சுரேஷ் கொடுத்த புகாரின்பேரில் பாகாயம் போலீசார் வழக்குப்பதிவு செய்து சிவசக்தியை கைது செய்தனர்.

Tags

Next Story