விக்கிரவாண்டி அருகே நள்ளிரவில் வாலிபரின் கழுத்தை அறுத்து பணம் பறிப்பு

விக்கிரவாண்டி அருகே நள்ளிரவில் வாலிபரின் கழுத்தை அறுத்து பணம் பறிப்பு
பாதிக்கப்பட்ட நபர்

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே உள்ள ஆசூர் கிராமத்தை சேர்ந்தவர் ஜெய்சங்கர் (47). இவர் விழுப்புரம் பகுதியில் உள்ள ஒரு தனியார் கம்பெனியில் சோப்பு, ஷாம்பு விற்பனையாளராக பணிபுரிந்து வருகிறார். இந்த நிலையில் ஜெய்சங்கர் வேலை விஷயமாக செஞ்சி சென்று விட்டு நள்ளிரவு 12 மணியளவில் அங்கிருந்து தனது மோட்டார் சைக்கிளில் சொந்த ஊருக்கு புறப்பட்டார்.

விக்கிரவாண்டி அடுத்த சின்னதச்சூர் சாலையில் தென்பேர் கிராமம் வந்தபோது, அங்கு புளியமரத்தின் அருகே நின்று கொண்டிருந்த 25 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் ஜெய்சங்கரை வழி மறித்து சின்னதச்சூர் கூட்டு ரோட்டில் இறக்கி விடுமாறு லிப்ட் கேட்டுள்ளார். இதை உண்மை என்று நம்பிய அவர், அந்த வாலிபரை மோட்டார் சைக்கிளில் ஏற்றிக்கொண்டு புறப்பட்டார்.

சின்னதச்சூர் ஆசூர் பிரிவு சாலை அருகே வரும் போது பின்னால் அமர்ந்து வந்த வாலிபர் திடீரென தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் ஜெய்சங்கரின் இடது பக்க கழுத்தை அறுத்து விட்டு, அவரிடம் இருந்த ரூ.7 ஆயிரத்தை பறித்து விட்டு அங்கிருந்து தலைமறைவாகி விட்டார். கண்இமைக்கும் நேரத்தில் நடந்த இந்த சம்பவத் தில் நிலைகுலைந்த ஜெய்சங்கர் ரத்தம் சொட்ட சொட்ட மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு வந்தது டன், அவரது மனைவியிடம் நடந்த சம்பவம் பற்றி கூறி, மயங்கினார்.

இதை கண்டு பதறிய அவரது மனைவி அக்கம் பக்கத்தினர் உதவியுடன் ஜெய்சங்கரை மீட்டு சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தார். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள். மேலும் இந்த சம்பவம் குறித்து விக்கிரவாண்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் விநாயகமுருகன், சப்-இன்ஸ்பெக்டர் முருகவேல் ஆகியோர் விசாரணை நடத்தி வருவதுடன், பணத்தை பறித்துச் சென்ற வாலிபரை வலைவீசி தேடி வருகிறார்கள். நள்ளிரவில் வாலிபர் ஒருவர் மோட்டார் சைக்கி ளில் லிப்ட் கேட்டு, சென்று சோப்பு விற்பனையாளரின் கழுத்தை அறுத்து பணம் பறித்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags

Next Story