400 ஆண்டுகளுக்கு மேல் பழமையான கோவில் திருவிழா !

400 ஆண்டுகளுக்கு மேல் பழமையான கோவில் திருவிழா !

கோவில் திருவிழா 

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் கடை வீதி மாரியம்மன் கோவில் அருகில் 400 ஆண்டுகளுக்கு மேல் பழமையான மதுரைவீரன், பொம்மியம்மாள், வெள்ளையம்மாள், காமாட்சியம்மன், பகவதியம்மன் கோவில் உள்ளது.அதன்படி இந்த ஆண்டுக்கான திருவிழா நேற்று இரவு நடைபெற்றது.
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் கடை வீதி மாரியம்மன் கோவில் அருகில் 400 ஆண்டுகளுக்கு மேல் பழமையான மதுரைவீரன், பொம்மியம்மாள், வெள்ளையம்மாள், காமாட்சியம்மன், பகவதியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் மாசி மாதம் திருவிழா நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டுக்கான திருவிழா நேற்று இரவு நடைபெற்றது. இரவு 11 மணிக்கு தொடங்கிய திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். அவர்களுக்கு கோவில் பூசாரி தங்கவேல் (70) அரிவாள் மீது ஏறி நின்று அருள்வாக்கு கூறினார். இந்த கோவிலில் சுவாமிக்கு நெய்வேத்தியமாக பூரி படையலிடப்பட்டு வழிபாடு நடந்தது.

Tags

Next Story