வாணியம்பாடியில் குடோனில் பயங்கர தீ விபத்து

வாணியம்பாடியில் குடோனில் பயங்கர தீ விபத்து

தீ விபத்து ஏற்பட்ட குடோன்

வாணியம்பாடியில் தோல் பொருட்கள் தயாரிக்கும் தொழிற்சாலை மற்றும் குடோனில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்து பல லட்சம் மதிப்பிலான பொருட்கள் தீயில் எரிந்து நாசமனது.

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் மரப்பொருட்கள், தோல் பொருட்கள் தயாரிக்கும் தொழிற்சாலை மற்றும் குடோனில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்து பல லட்சம் மதிப்பிலான பொருட்கள் தீயில் எரிந்து நாசம்.. திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த கோணாமேடு பகுதியில் ஏஜாஸ் மற்றும் இர்பான் ஆகியோருக்கு சொந்தமான வுட்லோண்ட் என்னும் மரப்பொருட்கள் தயாரிக்கும் தொழிற்சாலை மற்றும், தோல் தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது.

மேலும் தொழிற்சாலையின் பின்புறம் பிளாஸ்டிக் பொருட்கள் வைக்கும் குடோனும் உள்ளது.. இந்நிலையில் தொழிற்சாலையின் பின்புறம் ஏரிக்கால்வாயில் மர்ம நபர்கள் சிலர் தீவைத்துள்ளனர், இதனால் தீ மளமளவெனப்பரவி தொழிற்சாலையின் பின்புறம் வைக்கப்பட்டிருந்த பிளாஸ்டிக் குடோனில் உள்ள பொருட்களில் தீப்பற்றி உள்ளது, இதனை தொடர்ந்து தீ தோல் பொருட்கள் மற்றும் மரப்பொருட்களிலும் பரவியதால் தீ தொழிற்சாலை முழுவதும் பரவி கொளுந்துவிட்டு எரியத்தொடங்கியது, இதனால் அப்பகுதி முழுவதும் கரும்புகை மண்டலமாக காணப்பட்ட நிலையில், இத்தீவிபத்து குறித்து அப்பகுதி மக்கள் வாணியம்பாடி தீயணைப்புத்துறையினருக்கு தகவல் அளித்துள்ளனர்.

தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு துறையினர் ஒரு மணி நேரத்திற்க்கும் மேலாக போராடி தீயை அணைக்கு முற்பட்டனர், ஆனால் அதற்குள் தீயணைப்பு வாகனத்திலிருந்து தண்ணீர் முழுவதும் தீர்ந்து விட்டதால், உடனடியாக ஆம்பூர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, சம்பவ இடத்திற்கு விரைந்த ஆம்பூர் தீயணைப்பு துறையினரும் தீயை அணைக்க போராடினர், ஆனால் அந்த தீயணைப்புத்துறையினரின் வாகனத்திலும் தண்ணீர் தீர்ந்த நிலையில் டிராக்டர் மூலம் தண்ணீர் கொண்டு வந்து ஒரு மணி நேரத்திற்க்கும் மேலாக போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

மேலும் தொழிற்சாலை பின்புறம் அதிக அளவு தீப்பற்றி எரிந்த நிலையில் அப்பகுதி பொதுமக்களே கடப்பாரை, கொண்டு சுவற்றை இடித்து தள்ளி தீயை அணைக்க உதவி புரிந்தனர்.. ஆனால் அதற்க்குள் தொழிற்சாலையில் இருந்த பல லட்சம் மதிப்பிலான பொருட்கள் தீயில் எரிந்து நாசமாகின, இதனை தொடர்ந்து இத்தீவிபத்து குறித்து வாணியம்பாடி நகர காவல்துறையினர் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்க்கொண்டு வருகின்றனர்.

Tags

Next Story