கன்னியாகுமரி கடற்கரையில் பயங்கர தீ விபத்து
கன்னியாகுமரியில் தற்போது சீசன் காலமாகும். ஜனவரி 15ஆம் தேதி வரை ஐயப்ப பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருக்கும் என்பதால் தற்போது அதிக அளவில் தற்காலிக கடைகள் அமைத்து விற்பனை செய்து வரப்படுகிறது. காந்தி மண்டப சாலையில் வாகன பார்க்கிங் பகுதியை ஒட்டி வெளி மாநிலங்களை சேர்ந்தவர்களின் சுமார் 150 க்கு மேற்பட்ட கடைகள் வைத்துள்ளனர். இந்தப் பகுதியில் உள்ள கடற்கரையையொட்டி குப்பைகள் கொட்டப்படுகின்றன.
இந்த நிலையில் நேற்று அதிகாலை 5 மணி அளவில் மர்ம நபர்கள் யாரோ சிலர் இந்த குப்பையில் தீ வைத்தனர். காற்று வேகமாக வீசியதால் தீ கொழுந்து விட்டு எரிந்தது. இதனால் அந்த பகுதி புகை மண்டலமாக மாறியது. தற்காலிக கடைகள் அருகில் தூங்கிக் கொண்டிருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். காற்றில் தீ வேகமாக பரவி தற்காலிக கடைகளுக்கு வந்து கூடாது என்பதால் கன்னியாகுமாரி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தீயணைப்பு விரர்கள் உடனடியாக சம்பவ இடம் வந்து, சுமார் ஒரு மணி நேரத்தில் தீ முழுவதையும் அணைத்தனர். சரியான நேரத்தில் கவனித்ததால் சுமார் 150 தற்காலிக கடைகள் தப்பின. இந்த சம்பவத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story