அ. தி. மு.க. தெருமுனை பிரசார கூட்டம்

அ. தி. மு.க. தெருமுனை பிரசார கூட்டம்

அ. தி. மு.க. தெருமுனை பிரசார கூட்டம்

சந்தைப்பேட்டை பகுதியில் அ. தி. மு. க. சார்பில் தெருமுனை பிரசார கூட்டம் நடைபெற்றது. இதில் அதிமுக நிர்வாகிகள் பொதுமக்கள் என ஏராளமானோர் இதில் கலந்து கொண்டனர்.
சேலம் மாவட்டம் இளம்பிள்ளை சந்தைப்பேட்டை பகுதியில் தமிழக அரசின் மின் கட்டணம் உயர்வு, அத்தியாவசிய பொருட்கள் விலை உயர்வு, சொத்து வரி உயர்வு உள்ளிட்டவை கண்டித்து அ. தி. மு. க. சார்பில் தெருமுனை பிரசார கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு கிழக்கு ஒன்றிய செயலாளர் வெங்கடேசன் தலைமை தாங்கினார் . இளம்பிள்ளை பேரூர் செயலாளர் கிருஷ்ணன் (பொறுப்பு) வரவேற்று பேசினார். கூட்டத்தில் மாநில தகவல் தொழில்நுட்ப அணி துணை செயலாளர் ராமச்சந்திரன், மேற்கு ஒன்றிய செயலாளர் வருதராஜ் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர். அப்போது அரியானூர் பழனிசாமி, இளம்பிள்ளை பேரூர் செயலாளர் துளசிராஜன், அவை தலைவர் வரதராஜன், உட்பட அதிமுக நிர்வாகிகள் பொதுமக்கள் என ஏராளமானோர் இதில் கலந்து கொண்டனர்.

Tags

Next Story