ஆயிரம் மாணவர்கள் சாலையில் அமர்ந்து புத்தக வாசிப்பு

ஆயிரம் மாணவர்கள் சாலையில் அமர்ந்து புத்தக வாசிப்பு

புத்தகம் வாசிக்கும் மாணவர்கள்


புத்தக வாசிப்பை ஊக்குவிக்கும் வகையில் ஆயிரம் மாணவர்களுடன் அமர்ந்து புத்தகம் வாசித்தனர்.

திருச்சி மாவட்ட நிர்வாகம் சார்பாக கடந்த 23ம் தேதி முதல் டிசம்பர் மாதம் 4-ந் தேதி வரை திருச்சி செயிண்ட் ஜோசப் பள்ளி வளாகத்தில் புத்தக திருவிழா நடைபெறுகிறது. இந்தநிலையில் பொதுமக்கள் மற்றும் மாணவர்களிடையே புத்தக வாசிப்பை ஊக்குவிக்கும் வகையில் மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் அறிவுறுத்தலின்படி பல்வேறு விழிப்புணர்வுகள் ஏற்படுத்தப்பட்ட வருகிறது. இதன் ஒரு பகுதியாக ஸ்ரீரங்கம் தெற்குச் சித்திரை வீதியில் ஸ்ரீரங்கம் கோட்ட ஆட்சியர் தெட்சிணாமூர்த்தி தலைமையில், திருச்சி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கிருஷ்ண ப்ரியா முன்னிலையில், ஆயிரம் மாணவர்களுடன் அமர்ந்து புத்தகம் வாசிக்கும் அற்புத நிகழ்வு நடைபெற்றது

. விழா ஏற்பாடுகளை மாவட்ட நூலகர் சிவக்குமார், வாசகர் வட்டம் கோவிந்தசாமி ஆகியோர் செய்திருந்தனர். பள்ளித் தலைமை ஆசிரியர் லில்லி புளோரோ நூல்கள் வழங்கினார். திருச்சிராப்பள்ளி மாநகராட்சி மாமன்ற உறுப்பினர்கள் ஜவஹர், ராதா, செல்வி கலந்து மாணவர்களை வாழ்த்தினர்.

வட்டாரக் கல்வி அலுவலர்கள் மருதநாயகம், ஜெயலெட்சுமி கதை சொல்லி கார்த்திகா இல்லம் தேடிக் கல்வி இளஞ்சேட்சென்னி, காந்தி, பெல் சிட்டா மேரி, ஸ்ரீரங்கம் உதவி பெறும் பள்ளிகள் தாளாளர்கள், நகராட்சி மற்றம் உதவி பெறும் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள், இல்லம் தேடி கல்வி தன்னார்வலர்கள் பெற்றோர்கள் வாசித்தனர். தலைமை ஆசிரியர் சைவராஜ் நன்றி கூறினார்.

Tags

Next Story