சூறைக்காற்றால் சாய்ந்த ஆயிரம் ஆண்டு கால புளியமரம்

மதுரையில் சூறைக்காற்றால் ஆயிரம் ஆண்டு கால புளியமரம் சாய்ந்ததால் கிராம மக்கள் சோகம் அடைந்தனர்.

திருப்பரங்குன்றம் அருகே பலத்த சூறைக்காற்றால் கிராம மக்கள் தெய்வமாக வழிபட்டு வந்த ஆயிரம் ஆண்டு கால புளிய மரம் வேரோடு சாய்ந்தது நல்வாய்ப்பாக அப்பகுதியில் யாரும் இல்லாததால் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது .தெய்வமாக வழிபட்ட மரம் வேரோடு சாய்ந்தது மன வருத்தமாக உள்ளதாக கிராம மக்கள் கண்ணீர் மல்க தெரிவித்தனர் மதுரை நாகமலை புதுக்கோட்டை அருகே புதுக்குளம் ஒன்றாவது பிட் கிராமம் அமைந்துள்ளது,இந்த கிராமத்தில் ஆயிரம் ஆண்டுகள் பழமையான சப்பாணி என்கிற புளியமரம் உள்ளது, இந்த சப்பாணி என்கிற புளியமரம் இந்த கிராமத்தில் காவல் தெய்வமாக விளங்கி வந்து உள்ளது கிராம மக்கள் தங்களது வீட்டில் எந்த ஒரு விசேஷம் நடந்தாலும் அந்த மரத்தினை வழிபட்டு அந்த விசேஷத்திற்கு உண்டான பணியை துவக்கும் ஐதீகம் உள்ளது.

ஆயிரம் ஆண்டு கால பழமையான இந்த மரத்தை பராமரிக்க எண்ணி கடந்த 2020 ஆம் ஆண்டின் போது புதுக்குள கிராம நிர்வாக அலுவலர் மறைந்த நகைச்சுவை நடிகர் விவேக் உதவியை நாடிய போது அதற்கு உடனடியாக மறைந்த நகைச்சுவை நடிகர் விவேக் இந்த மரத்தை பராமரிக்கும் பணிகளை மேற்கொள்கிறேன் என்று புதுக்குளம் கிராம நிர்வாக அலுவலரிடம் தெரிவித்துள்ளார், கொரோனா காலத்தின் போது அவர் எதிர்பாராதவிதமாகஇறந்து விட்டதால் இந்த மரத்தை சீரமைக்கும் பணியானது நடைபெறாமல் இருந்து வந்தது .புதுக்குளம் கிராமத்தில் புகழ்பெற்ற இந்த மரத்தை மையமாக வைத்துத்தான் மிர்ச்சி சிவா,அசோக் செல்வன் நடித்த 144 தடை உத்தரவு படம் எடுக்கப்பட்டிருந்தது. கிராமத்தின் காவல் தெய்வம், மறைந்த நகைச்சுவை நடிகர் விவேக்கின் உதவி,144 படத்தின் மையக்கதை என்கிற இவ்வளவு பெருமைகளை கொண்ட ஆயிரம் ஆண்டு கால பழமை வாய்ந்த மரம் என்றும் இந்த மரத்தை 30 பேர் சேர்ந்தால் மட்டுமே கட்டி அணைக்க முடியும் என்ற அளவுக்கு வளர்ந்திருந்த சப்பானி என்கிற புளியமரம் கிட்டத்தட்ட ஒரு ஏக்கர் பரப்பளவில் பரந்து விரிந்ததாக கிராம மக்கள் தெரிவித்தனர்.பழம்பெருமை வாய்ந்த இந்த புளியமரம் இன்று மதியம் 2:30 மணியளவில் வீசிய சூறாவளி காற்றினால் வேருடன் முற்றிலுமாக சாய்ந்து விழுந்தது. மரம் விழுந்ததில் அருகில் இருந்த மின்கம்பங்கள் முறிந்து விழுந்தது.நல்வாய்ப்பாக மரம் சாய்ந்த போது யாரும் இல்லாததால் எவ்வித உயிர் சேதமும் ஏற்படவில்லை . தெய்வமாக வணங்கிய புளியமரம் வேரோடு சாய்ந்து விழுந்தது பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்த புளிய மரத்தை சாமியாக வழிபட்டு வந்த புதுக்குள கிராம மக்கள் மிகுந்த வேதனை அடைந்து கண்ணீர் மல்க அந்த மரத்தை வணங்கி சென்றனர். பழம்பெருமை வாய்ந்த இந்த புளிய மரத்தை நாங்கள் காவல் தெய்வமாக வணங்கி வந்ததாகவும் இந்த மரத்தினை பாதுகாக்க பலரிடமும் உதவி கேட்டிருந்த நிலையில் மரம் வேரோடு சாய்ந்து விழுந்தது மிகுந்த மனவருத்தம் அளிப்பதாக கிராம மக்கள் கண்ணீர் மல்க தெரிவித்தனர். சூறைக்காற்றால் வேரோடு சாய்ந்த ஆயிரம் ஆண்டுகால பழம் பெருமை வாய்ந்த இந்த சப்பானி என்றழைக்கப்படும் புளியமரத்தை நவீன யுக்திகளை பயன்படுத்தி மீண்டும் உயிர்ப்பிக்க செய்ய வேண்டும் என்பதே இக்கிராம மக்களின் வேண்டுகோளாக உள்ளது. திரைப்படங்களிலும் இந்த மரம் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Tags

Next Story