,பணம் வைத்து சூதாடிய 3 பேர் கைது
கோப்பு படம்
. கரூர் மாவட்டம், க. பரமத்தி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில், பணம் வைத்து சூதாடுவதாக பெண் காவலர் சித்ராதேவிக்கு தகவல் கிடைத்தது. இந்த தகவலின் அடிப்படையில் மே 24ஆம் தேதி மாலை 4 மணி அளவில், புகலூர் தாலுகா, முன்னூர் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டார்.
அப்போது, அப்பகுதியில் உள்ள தபால் அலுவலகம் அருகே வசித்து வரும் ரங்கசாமி மகன் சுரேஷ் மற்றும் அவரது சகோதரர் சதீஷ்குமார், அத்திப்பாளையம் பகுதியைச் சேர்ந்த ராஜன் ஆகிய மூன்று பேரும் பணம் வைத்த சூதாடுவது கண்டறியப்பட்டது. எனவே,3 பேரையும் கைது செய்து, அவர்கள் சூதாட பயன்படுத்திய 52 சூதாட்ட அட்டைகளையும், ரூபாய் 150-ஐ பறிமுதல் செய்த காவல்துறையினர், மூன்று பேர் மீதும் வழக்கு பதிவு செய்து, பின்னர் அவர்களை காவல் நிலையப் பிணையில் விடுவித்து நடவடிக்கை மேற்கொண்டனர் க.பரமத்தி காவல்துறையினர்.