மாட்டை கொல்ல வந்த புலி - அச்சத்தில் விவசாயிகள்

மாட்டை கொல்ல வந்த புலி - அச்சத்தில் விவசாயிகள்

உயிர்  தப்பிய மாடு 

கேர்மாளம் அருகே தடுப்பணை அப்பகுதியில் மாட்டை வேட்டையாடுவதற்காக புதருக்குள் பதுங்கியிருந்த புலியை கண்டு மக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.

ஈரோடு மாவட்டம், கேர்மாளம்- ஜோகினுார் இடையே உள்ள தடுப்பணை அருகில், தொழிலாளர்கள் பூண்டு பயிரிடும் பணியில் நேற்று முன்தினம் மாலை, 5:00 மணிக்கு திருப்பூர்காரர் தோட்டத்தில் ஈடுபட் டிருந்தனர். அந்த பகுதியில் விவசாயி புட்டா, அவருடைய மாட்டை மேய்ச்சலுக்காக பள்ளத்தின் ஓரத்தில் கட்டியிருந்தார். அப்போது மாடு மிரண்டுள்ளது; நாயும் தொடர்ந்து குரைத்து கொண்டே இருந்தது.

அந்த நேரத்தில் புதருக்குள் மறைந்திருந்த புலி அதிக சத்தத்துடன் உறுமி வெளியே வந்தது. இதை பார்த்த தொழிலாளிகள் அதிர்ச்சியடைந்தனர். இவ்வளவு பெரிய புலியை, நேரில் பார்த்ததில்லை என விவசாயி புட்டா அச்சத்துடன் கூறியுள்ளார். அந்த பகுதியில் பொக்லைன் வாகனம் சத்தம் கேட்டு, புதருக்குள் பதுங்கியிருந்த புலி, ஒரே பாய்ச்சலில் தடுப்பணையை தாண்டி குதித்து வனப்பகுதிக்குள் சென்றது. இதனால் அப்பகுதி விவசாயிகள் அச்சத்தில் உள்ளனர்.

Tags

Next Story