சுற்றுலா வந்த வாலிபர் நீரில் மூழ்கி உயிரிழந்தார்

சுற்றுலா வந்த வாலிபர் நீரில் மூழ்கி உயிரிழந்தார்

திருச்சி மாவட்டம் துறையூர் அருகே உள்ள புளியஞ்சோலை சுற்றுலாத்தலத்திற்கு பார்வையிட வந்த வாலிபர் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார்.


திருச்சி மாவட்டம் துறையூர் அருகே உள்ள புளியஞ்சோலை சுற்றுலாத்தலத்திற்கு பார்வையிட வந்த வாலிபர் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார்.
ருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் சிவக்குமார். இவர் திருப்பூரில் உள்ள ஒரு பனியன் கம்பெனியில் வேலை செய்து வருகிறார்.நேற்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை என்பதால் தன் தாய் கங்கேஸ்வரி மற்றும் திருப்பூரை சேர்ந்த ஆறுமுகம் (வயது 63 ) பாப்பாத்தி (வயது 58 ) சாந்தாமணி (வயது 56 ) ஆகியோருடன் புளியஞ்சோலைக்கு சுற்றுலா வந்துள்ளார் அப்போது சிவகுமார் எதிர்பாராத விதமாக அங்கிருந்த நீரில் தவறி விழுந்து மூழ்கினார். அவரை மீட்ட உறவினர்கள் அவரை சோதனை செய்தபோது உயிரிழந்த நிலையில் காணப்பட்டுள்ளார் இதுகுறித்து வனத்துறையினர் சேந்தமங்கலம் காவல் துறையினருக்கு தகவல் அளித்தனர்.தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்விற்க்காக நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.பின்னர் இச்சம்பவம் குறித்து சேந்தமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.தாய் கண் முன்னே மகன் உயிரிழந்த சம்பவம் அப் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

Tags

Next Story