கொடைக்கானல் அருகே சுற்றுலா வாகனம் தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு
தீப்பிடித்த சுற்றுலா வாகனம்
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் வத்தலக்கு பிரதான மலைச்சாலையில் சிதம்பரத்தை சேர்ந்த 7 சுற்றுலாப்பயணிகள் கொடைக்கானலை நோக்கி ரெனால்ட் லாட்ஜி வாகனத்தில் வந்து கொண்டிருந்தனர்.
அப்போது மலைச்சாலையில் ஒரு பகுதியாக உள்ள ஊத்து என்ற பகுதியில் உள்ள பெட்ரோல் பங்கிற்கு பெட்ரோல் நிரப்ப சென்றுள்ளர்,பெட்ரோல் பங்கிற்கு முன்பகுதியிலேயே வாகனத்தின் முன் பகுதியில் இருந்து புகை வர தொடங்கியுள்ளது,இதனை பார்த்த சுற்றுலாப்பயணிகள் வாகனத்தை நிறுத்தி முன்பகுதியில் உள்ள பானட்டை திறந்து பார்க்கும் போது தீ எரிய தொடங்கியுள்ளது,
சிறிது நேரத்தில் தீ மளமள வென பிடிக்க தொடங்கும் போது அனைத்து சுற்றுலாப்பயணிகளும் சுதாரித்து வாகனத்தை விட்டு இறங்கியுள்ளனர்.
இதனை தொடர்ந்து அப்பகுதியினர் தீயணைப்பு துறை யினருக்கு தகவல் அளித்துள்ளனர், தகவல் அடிப்படையில் விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் எரிந்த வாகனத்தின் மீது தண்ணீர் பீய்ச்சி அடித்து தீயை கட்டுபடுத்தினர்,வாகனமானது முழுவதுமாக எரிந்து சேதமானது, இதனால் மலைச்சாலையில் சிறிது நேரம் பரபரப்பாக காணப்பட்டது, இதனையடுத்து வாகனத்தின் ரேடியேட்டரில் தண்ணீர் இல்லாததால் தீபிடித்து எரிந்து இருக்கலாம் என தீயணைப்பு துறையினரால் தகவல் முதல் கட்டமாக தகவல் கிடைக்கபெற்றுள்ளது.