தெப்ப திருவிழாவில் சிறப்பாக பணியாற்றிய நகராட்சி தூய்மை பணியாளர்களுக்கு விருந்து

தெப்ப திருவிழாவில் சிறப்பாக பணியாற்றிய நகராட்சி தூய்மை பணியாளர்களுக்கு விருந்து

தெப்ப திருவிழாவில் சிறப்பாக பணியாற்றிய நகராட்சி தூய்மை பணியாளர்களுக்கு விருந்து

திருவாரூர் தெப்ப திருவிழாவில் சிறப்பாக பணியாற்றிய நகராட்சி தூய்மை பணியாளர்களுக்கு விருந்து வைக்கப்பட்டது.
உலக பிரசித்திபெற்ற திருவாரூர் தியாகராஜர் திருக்கோவிலில் தெப்ப திருவிழா நிறைவடைந்தது. இதில் சிறப்பாக நகரை தூய்மையாக வைத்திருக்க பணியாற்றிய நகராட்சி தூய்மை பணியாளர்களுக்கு ஈர உள்ளம் என்ற அமைப்பின் சார்பில் அமைப்பின் தலைவர் அண்ணாதுரை தலைமையில் நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. தனியார் அரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சிறப்பாக பணியாற்றிய தூய்மை பணியாளர்களை கௌரவிக்கும் விதமாக பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்பட்டு அசைவ விருந்து வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் 200 தூய்மை பணியாளர்கள் பங்கேற்றனர்.

Tags

Next Story