கனமழையால் வேருடன் சாய்ந்த மரம் - அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய பொதுமக்கள்

கனமழையால் வேருடன் சாய்ந்த மரம் - அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய பொதுமக்கள்

சாய்ந்த மரம் 

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த ஒரு வார காலமாக கனமழை பெய்து வரும் நிலையில், வாணியம்பாடி சார்பாதிவாளர் அலுவலகம் அருகே உள்ள அரசினர் தோட்ட வளாகத்தில் உள்ள 50 ஆண்டு கால பழமைவாய்ந்த மாட்டுத்தீவன மரம் கனமழையின் காரணமாக வேருடன் சாய்ந்து விழுந்தது. இதனால் வாணியம்பாடி நகர மற்றும் கிராமிய காவல்நிலையம், வாணியம்பாடி வட்டாச்சியர் அலுவலகத்திற்கு செல்லும் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்க்குள்ளாகியுள்ளனர். மேலும் இந்த மரத்தின் கீழ் நிழலுக்காகவும், சார்பாதிவாளர் அலுவலகத்தில் பத்திரம் எழுத நின்று கொண்டிருந்தவர்கள் மரம் சாய்ந்து விழுந்த போது அங்கிருந்து தப்பியோடியதால் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினர். இதனை தொடர்ந்து வாணியம்பாடி நகராட்சி ஊழியர்கள் கனமழையினால் விழுந்த மரத்தை அப்புறப்படுத்தினர்.

Tags

Next Story