பழங்குடியினப் பெண் விஷம் குடித்து தற்கொலை
பழங்குடியினப் பெண் ஜெனிஷா
புறாவிளை பகுதியில் காதல் திருமணம் செய்த பழங்குடியின பெண் விஷம் குடித்து தற்கொலை
குமரி மாவட்டம் புறாவிளை பகுதி மலைவாழ் பழங்குடியின மக்கள் வாழும் மலை கிராமத்தை சேர்ந்தவர் சுகுமாரன். இவரது மனைவி ஜெயா.இவர்களுக்கு ஒரு மகன் ஒரு மகள் உள்ளனர். மகள் ஜெனிஷா பிளஸ் 2 படித்துள்ளார்.கடந்த 2022 ஆம் ஆண்டு அதே பகுதியை சேர்ந்த ஜெனிஸ் என்பவரை காதல் திருமணம் செய்து கொண்டார். இருவரும் அதே பகுதியில் தனியாக வசித்து வந்தனர். வீட்டில் இருந்து வந்த ஜெனிஷா கடந்த 4 மாதங்களாக திருந்திக்கரை பகுதியில் தையல் பயிற்சிக்கு சென்று வந்தார்.இந்த நிலையில் அவரது தாயார் ஜெயாவுக்கு மகள் வீட்டில் விஷம் குடித்த நிலையில் கிடந்ததாகவும் மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போது அவள் உயிரிழந்து விட்டதாகவும் தெரிவித்துள்ளனர்.மகள் ஜெனிஷா உயிரிழப்பு குறித்து ஆர்டிஓ விசாரணை நடத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்த நிலையில் ஆர்டிஓ தமிழரசி ஜெனிஷாவின் பெற்றோரிடம் மற்றும் உறவினரிடம் விசாரணை நடத்தி நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்.
Next Story