தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக் கழகத்தில் முப்பெரும் விழா

தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக் கழகத்தில் முப்பெரும் விழா

தஞ்சை தமிழ் பலக்லைக்கழகம் 

தஞ்சை தமிழ் பல்கலைக்கழகத்தில் முப்பெரும் விழா நடந்தது.

அருட்பெருட்ஜோதி, தனிப்பெருங்கருணை வள்ளலார் 200ஆவது ஆண்டு நிறைவு விழா, மாநில அளவில் நடத்தப்பெற்ற மாபெரும் பேச்சுப் போட்டியின் பரிசளிப்பு விழா, நூல் வெளியீட்டு விழா ஆகிய முப்பெரும் விழா தமிழ் பல்கலைக்கழகத்தில் நடைபெற்றது. நிகழ்விற்கு, தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் வி.திருவள்ளுவன் தலைமை வகித்து, அருட்பெருஞ்ஜோதி ஞானதீபத்தை ஏற்றி வைத்துப் பேசினார். பதிவாளர்(பொ) முனைவர் இளையாப்பிள்ளை முன்னிலை வகித்தார். புலமுதன்மையர் பேராசிரியர் குறிஞ்சி வேந்தன் வரவேற்றார். தொடர்ந்து தொழிலாளர் ஈட்டுறுதிக் கழக மருத்துவமனைகளின் இயக்குநர் மருத்துவர் ஜெய.ராஜமூர்த்தி எழுதிய, "வைகுண்டர் வள்ளலார் ஓர் ஒப்பீட்டு" நூல் வெளியிடப்பட்டது. நூலின் முதல் படியை, தஞ்சாவூர் மாநகராட்சி மேயர் சண்.இராமநாதன் வெளியிட, துணைவேந்தர் வி.திருவள்ளுவன் பெற்றுக் கொண்டார். சிறப்பு விருந்தினர்களாக நாமக்கல் கவிஞர் இராமலிங்கம் பிள்ளையின் புதல்வர் ராஜா ராமலிங்கம், வடலூர் சங்க கெளரவத் தலைவர் ராமதாஸ், வடலூர் தலைமைச் சங்கத்தின் மாநிலப் பொதுச் செயலாளர் மருத்துவர் வெற்றிவேல், மருத்துவர் பி.கி.சிவராமன் ஆகியோர் கலந்து கொண்டனர். முன்னதாகக் காலையில் நடைபெற்ற மாநில அளவிலான மாபெரும் கல்லூரிப் பேச்சுப் போட்டியில், மாநிலம் முழுவதும் உள்ள கல்லூரி மாணவர்கள் 500க்கும் மேல் கலந்து கொண்டனர். அதில் முதல் பரிசு 30 ஆயிரம், இரண்டாம் பரிசு 20 ஆயிரம், மூன்றாம் பரிசு 10 ஆயிரம், ஆறுதல் பரிசாக பத்து பேருக்கு தலா ரூ.1000 வழங்கப்பட்டன. நிகழ்வின் ஏற்பாடுகளை வடலூர் தலைமைச் சங்க மாநிலத் தலைவர் மருத்துவர் அருள் நாகலிங்கம், பேராசிரியர் மஞ்சுளா, பேராசிரியர் சங்கரராமன், கவிஞர் வே.து.வெற்றிச்செல்வன், கவிஞர் வே.து.யோகேஸ்வரன் ஆகியோர் செய்திருந்தனர்.


Tags

Next Story