மதுரை விமான நிலையம் அருகே சாலையோர தடுப்பில் மோதி லாரி விபத்து

மதுரை விமான நிலையம் அருகே சாலையோர தடுப்பில் மோதி லாரி  விபத்து

சிதறிக் கிடக்கும் வெங்காயம்

மதுரை விமான நிலையம் அருகே சாலையோர தடுப்பில் மோதி லாரி விபத்துக்குள்ளனதில் சாலை முழுவதும் சிதறி கிடந்த வெங்காயம்.

மதுரை விமான நிலையம் அருகே சாலையோர தடுப்பில் மோதி லாரி விபத்து; சாலை முழுவதும் சிதறி கிடந்த வெங்காயம் திண்டுக்கல்லில் இருந்து தூத்துக்குடிக்கு 3 டன் எடை கொண்ட வெங்காய லோடு ஏற்றிச் சென்ற லாரி மதுரை நான்கு வழி சாலையில் வந்து கொண்டிருக்கும்போது திடீரென சாலையோர தடுப்பில் மோதி விபத்துக்குள்ளானது.

(TN 57 BT 6268) எண் கொண்ட லோடு லாரியை டிரைவர் சக்திவேல் என்பவர் ஒட்டி வந்துள்ளார். இந்த லாரி மதுரை விமான நிலையம் அருகே நான்கு வழி சாலையில் வலைவின் போது கட்டுபட்டை இழந்த லாரி சாலையோரம் உள்ள தடுப்பு மோதி விபத்து ஏற்பட்டது.

இந்த விபத்தில் லாரி கவிழ்ததால் வெங்காயங்கள் மொத்தமாக சாலையில் சிதறி கிடந்தன. அதிர்ஷ்டவசமாக லாரியை ஒட்டி வந்த டிரைவர் சக்திவேல் லேசான காயங்களுடன் உயிர் தப்பினார். பின்னர் அங்கு பணிபுரியும் மணியாட்கள் சிதறி கிடந்த வெங்காயங்களை சாக்கு மூடைகளில் அள்ளினர்.

இதனால் அப்பகுதியில் அரை மணி நேரத்துக்கு மேலாக வாகன போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அருகில் உள்ளவர்கள் காவல்துறைக்கு போன் செய்து லாரியை அகற்றி மற்றும் சாலை போக்குவரத்தை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

Tags

Next Story