இரணியல் அருகே லாரிகள் மோதல் - டிரைவரை மீட்ட தீயணைப்பு துறை
காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்
கேரள மாநிலம் விழிஞ்ஞம் துறைமுக பணிக்கு வள்ளியூரில் இருந்து கற்களை ஏற்றிக்கொண்டு டாரஸ் லாரி ஒன்று நேற்று இரவு சுங்கான்கடை தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டு இருந்தது. தோட்டியோடு வந்தபோது எதிர்பாராதவிதமாக முன்னால் சென்ற லாரி மீது பயங்கரமாக மோதி விபத்துக்குள்ளானது. இதில் லாரி டிரைவர் விருதுநகர் மாவட்டம் நரிக்குட்டியை சேர்ந்த ஐயாதுரை மகன் ஐயங்கார் (39) லாரிக்குள் சிக்கி பலத்த காயமடைந்தார். வலியால் துடித்த அவரை அந்த வழியாக வந்தவர்கள் மீட்க முயன்றனர். ஆனால் அவரது கால் இடிபாடுகளுக்குள் சிக்கி வெளியே எடுக்க முடியாத நிலை ஏற்பட்டது. இதுகுறித்து தக்கலை தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் சுமார் அரை மணி நேரம் போராடி லாரி டிரைவரை மீட்டு சிகிச்சைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சம்பவம் குறித்து இரணியல் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story