கொல்லங்கோடு அருகே கடைக்குள் புகுந்த லாரி

கொல்லங்கோடு அருகே கடைக்குள் புகுந்த லாரி
லாரி புகுந்ததால் சேதமடைந்த கடை
கொல்லங்கோடு அருகே சூழால் சோதனை சாவடியில் நிறுத்தப்பட்டிருந்த எம்.சாண்ட் லாரி வேகமாக ஒடி கடை மீது மோதியதில் கூரை சீட், ஷட்டர் ஆகியவை சேதம் அடைந்தன.
கன்னியாகுமரி மாவட்டம் கொல்லங்கோடு அருகே சூழால் பகுதியில் ஒரு சோதனை சாவடி உள்ளது. இந்த சோதனை சாவடியில் பதிவு செய்வதற்காக நேற்று ஒரு டாரஸ் லாரியை நடைக்காவு - சூழல் சாலையில் இறக்கமான பகுதியில் ஹேன்ட் பிரேக் போட்டு நிறுத்திவிட்டு, லாரி எஞ்சினை ஆஃப் பண்ணாமல் டிரைவர் இறங்கி சென்றுள்ளார். இந்த நிலையில் எதிர்பாராத விதமாக லாரி வேகமாக ஓடி சாலையை கடந்து சென்று, சாலையோரம் ஓரத்தில் பூட்டி இருந்த ஜீவன் என்பவருக்கு சொந்தமான மொபைல் கடையில் மோதியுள்ளது. இதில் கடை, கூரை சீட், ஷட்டர் ஆகியவை சேதம் அடைந்தது. சூழல் சந்திப்பில் மூன்று திசையில் இருந்து வரும் வாகனங்களால் எப்பொழுதும் போக்குவரத்து நெரிசலாக காணப்படும். ஆனால் விபத்து நடந்த நேரத்தில் வாகனமோ பொதுமக்களோ நடந்து செல்லாத காரணத்தாலும், மொபைல் கடை பூட்டி இருந்ததாலும் பெரும் விபத்து ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த லாரி ராதாபுரம் பகுதியில் இருந்து எம்சாண்ட் ஏற்றி வந்ததும், குமரி மாவட்டத்தில் நுழையும்போது பதிவு செய்யாமல் வந்ததும், அதிகமான பாரம் ஏற்றி வந்ததும் போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

Tags

Read MoreRead Less
Next Story