நாமக்கல் - பள்ளத்தில் கவிழ்ந்த லாரி

நாமக்கல் - பள்ளத்தில் கவிழ்ந்த லாரி

பள்ளத்தில் கவிழ்ந்த லாரி

குமாரபாளையம் அருகே பள்ளத்தில் கவிழ்ந்த லாரி, பொக்லின் உதவியுடன் மீட்கப்பட்டது
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் சேலம் கோவை புறவழிச்சாலை பகுதியில் கத்தேரி பிரிவு பகுதியில் மேம்பாலம் கட்டுமான பணிகள் துவங்கி நடந்து வருகிறது. இதன் ஒரு கட்டமாக சர்வீஸ் சாலைகள் அகலப்படுத்தும் பணி தற்போது நடந்து வரும் நிலையில், சாலையோரம் பொக்லின் மூலம் பள்ளம் தோண்டப்பட்டு வருகிறது. அவ்வழியே வந்த லாரி, திரும்பி செல்ல, பின்புறமாக செல்ல எதிர்பாராத விதமாக பள்ளத்தில் லாரி கவிழ்ந்தது. இதனை பொக்லின் மூலம் நீண்ட நேர போராட்டத்திற்கு பின் மீட்கப்பட்டது. இதனால் சற்று நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மேம்பால பணிக்காக பிரதான சாலையில் வரும் வாகனங்கள் நிறுத்தப்பட்டு, சர்வீஸ் சாலையில் திருப்பி விடப்படவுள்ளதால், சர்வீஸ் சாலை அகலப்படுத்தும் பணி நடந்து வருகிறது.

Tags

Next Story