ஊர்காவல் படையில் இணைந்த மூன்றாம் பாலினத்தவர்
கோவையில் ஊர்காவல் படையில் மூன்றாம் பாலினத்தவர் இணைந்திருப்பது குறிப்பிடதக்கது.
கோவை:காவலர் பயிற்சி பள்ளி மைதானத்தில் காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் உத்தரவின் பேரி மாநகர நிலையங்களில் பணியாற்றும் பெண் காவலர்களுக்கு கராத்தே பயிற்சி வகுப்புகள் அளிக்கபட்டது. இந்நிலையில் காவலர் பயிற்சி பள்ளியில் ஊர்காவல் படைக்கு ஆட்கள் தேர்வு செய்யும் பணி நடைபெற்று வந்ததை ஆய்வு மேற்கொண்ட ஆணையர் தேர்வாளர்களிடம் பேசும்போது ஊர்காவல் பணியாற்றுபவர்கள் காவலர் போட்டிக்கு தேர்வு எழுதுகையில் பணி நியமனம் பெற சாதகமான சூழல் அமையும் சீருடை பணியாளர் பணியில் சேர நல்ல வாய்ப்பாக அமையும் என்றார்.
மேலும் ஊர்காவல் படையில் சேருபவர்களுக்கு உடற்தகுதி மற்றும் ஒழுக்கம் அவசியம் என அறிவுரை கூறியவர் பொதுமக்களுக்கு முழு மனதோடும் ஈடுபாட்டுடன் சேவை செய்ய வேண்டும் என்றார்.தேர்வில் மூன்றாம் பாலினத்தவர் சுப்ரமணி என்பவர் ஊர்காவல் படையில் இணைந்தது குறிப்பிடதக்கது.