டூவீலரில் வேகமாக சென்ற இளைஞரின் வாகனம் ரயில்வே மேம்பால சுவற்றில் மோதி விபத்து
காவல்துறை விசாரணை
டூவீலரில் வேகமாக சென்ற இளைஞரின் வாகனம் ரயில்வே மேம்பால சுவற்றில் மோதி விபத்து. காவல்துறை வழக்கு பதிவு.
டூவீலரில் வேகமாக சென்ற இளைஞரின் வாகனம் ரயில்வே மேம்பால சுவற்றில் மோதி விபத்து.காவல்துறை வழக்கு பதிவு. தஞ்சாவூர் மாவட்டம், திருவையாறு, வின்னமங்கலம் அருகே உள்ள பூதராய நல்லூர், மாதா கோவில் தெருவை சேர்ந்தவர் பிரகாஷ் மகன் ஜோ வயது 24. இவர் மார்ச் 12ஆம் தேதி காலை 10:30 மணி அளவில், திருச்சி- கரூர் சாலையில், அவரது டூவீலரில் சென்று கொண்டு இருந்தார். இவரது வாகனம் கரூர் மாவட்டம், வெள்ளியணை காவல் எல்லைக்குட்பட்ட, ரயில்வே பாலம் அருகே வேகமாக வந்தபோது, நிலை தடுமாறி பாலத்தின் சுவற்றின் மீது மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் ஜோவிற்கு தலை, வலது கை உள்ளிட்ட பகுதிகளில் பலத்த காயம் ஏற்பட்டதால், உடனடியாக அவரை மீட்டு, தனியார் ஆம்புலன்ஸ் மூலம் கரூர் அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இந்த சம்பவம் அறிந்த ஜோவின் தாயார் லிமரோஸ் வயது 39 என்பவர், இது குறித்து காவல்துறையினருக்கு அளித்த புகாரின் பேரில், சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர், இது தொடர்பாக டூவீலரை கவன குறைவாகவும், அதிவேகமாக ஓட்டி விபத்து ஏற்படுத்திய ஜோ மீது வழக்கு பதிவு செய்துள்ளனர் வெள்ளியணை காவல்துறையினர்.
Next Story