இருசக்கர வாகனம் சாலை தடுப்பில் மோதி பலி
விசாரணை
விபத்து
தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் டி நாகலாபுரத்தைச் சேர்ந்தவர் விஜய் கிறிஸ்டோபர். இவர் தனது நண்பர் ராம்குமார் என்பவருடன் இருசக்கர வாகனத்தில் கம்பத்திலிருந்து தேனீ நோக்கி வந்து கொண்டிருந்தார். அப்போது பழனிசெட்டிபட்டி ஆர்டிஓ செக்போஸ்ட் அருகே வந்தபோது, அங்கிருந்த இரும்பு தடுப்பில் இரு சக்கர வாகனம் மோதி இருவரும் கீழே விழுந்தனர். அருகில் இருந்தவர்கள் இருவரையும் மீட்டு தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதில் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே விஜய் கிறிஸ்டோபர் உயிரிழந்தார்.
Next Story