திருச்சியில் இரண்டு வயது குழந்தை திடீர் சாவு
கோப்பு படம்
திருச்சியில் இரண்டு வயது குழந்தை இறந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சி சிந்தாமணி திரௌபதி மாரியம்மன் கோவில் தெரு அண்ணா நகர் பகுதியில் சேர்ந்தவர் அடைக்கலராஜ் இவரது மனைவி ஸ்டெல்லா. இந்த தம்பதியருக்கு இரண்டு வயதில் நித்ரா என்ற பெண் குழந்தை உள்ளது.
இந்த குழந்தைக்கு வழக்கம் போல் அவரது தாயார் காலையில் பால் மற்றும் பிஸ்கட் கொடுத்தார் பின்னர் மதியம் அரிசிக்கஞ்சி மற்றும் பால் கொடுத்ததாக தெரிகிறது பின்னர் சாப்பிட்ட நேரத்தில் குழந்தைக்கு வாழ்ந்தியும் மயக்கமும் ஏற்பட்டது இதனால் பதறிப்போன பெற்றோர் நித்ராவை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர்.
அங்கு மருத்துவர்கள் மருத்துவத்துவிட்டு குழந்தை ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இறப்புக்கான காரணம் உடனடியாக தெரியவில்லை இது குறித்து கோட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடக்க வருகின்றனர்.
Next Story