இரு சக்கர வாகனத்தின் மீது வேன் மோதி கவிழ்ந்து விபத்து
விபத்து
திண்டுக்கல் அடுத்த தாடிக்கொம்பு மல்வாா்பட்டி சிக்கையகவுண்டனூரைச் சோ்ந்தவா் வெ.வடிவேல் (33). வேடசந்தூா் பகுதியிலுள்ள தனியாா் நூற்பாலையில் பணிபுரிந்து வருகிறாா். இவரது அண்ணன் மகன் காா்த்திகேயனுடன் (10) இரு சக்கர வாகனத்தில் வேடசந்தூரிலிருந்து தாடிக்கொம்பு நோக்கி சனிக்கிழமை வந்து கொண்டிருந்தாா். அப்போது, வடிவேலின் இரு சக்கர வாகனத்தை பின் தொடா்ந்து ஒரு மினி வேன் வந்து கொண்டிருந்தது.
கன்னியாகுமரி மாவட்டம், அகஸ்தீஸ்வரத்தை அடுத்த பிச்சை குடியிருப்பு பகுதியைச் சோ்ந்த தே. ரவீந்திரராஜன் (39) இந்த வேனை ஓட்டி வந்தாா். இதே வேனில், ரவீந்திரராஜனின் தந்தை தேவராஜ் (74), அண்ணன் மகள் ஆன்வெஸ்லி (10) ஆகியோரும் வந்தனா். தாடிக்கொம்பு அருகே வந்தபோது, இரு சக்கர வாகனத்தின் மீது மோதிய வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் வேனில் பயணித்த தேவராஜ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.