தம்பதி மீது வேன் மோதி விபத்து
திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி அருகே உள்ள திம்மநாயக்கன் பாளையத்தை சேர்ந்த கட்டிடத்தொழிலாளி ரவிக்குமார்(28) இவரது மனைவி தனலட்சுமி(25) இருவரும் திம்நாயக்கன்பாளையத்திலிருந்து டூவலரில் திருப்பூர் நோக்கி சென்று கொண்டிருந்தனர். அப்போது கவுண்டம்பாளையம் பஸ் ஸ்டாப் அருகே சென்ற போது எதிரே வாந்த டாடா ஏஸ் வாகனம் தம்பதி சென்ற டூவீலர் மீது மோதி விட்டு நிற்காமல் சென்றதாக கூறப்படுகிறது விபத்தில் ரோட்டில் விழுந்த தம்பதி படுகாயமடைந்தனர். இதில் ரவிக்குமார் தலையில் பலத்த காயத்துடன் இரத்தவெள்ளத்தில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார். அதை பார்த்த அக்கம்பக்கத்தினர் 108 ஆம்பிலன்ஸூக்கு தகவல் கொடுத்தனர். சுமார் 20 நிமிடங்கள் தாமதமாக வந்த ஆம்புலன்ஸ உயிருக்கு போராடிய ரவிக்குமார் தம்பதியை மீட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆம்புலன் வருவதற்குள் தம்பதியின் உறவினர்கள் சம்பவ இடத்தில் குவிந்ததால் அப்பகுதியில் கடுமையான போக்குவரத்து பாதிப்பிற்குள்ளானது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ஊத்துக்குளி போலீசார் விபத்து குறித்தும் தப்பிச்சென்ற டாடா ஏஸ் வாகனம் குறித்தும் விசாரித்து வருகின்றனர். விபத்தில் இருசககர வாகனத்தை ஓட்டிவந்த ரவிக்குமார் அணிந்திருந்த ஹெல்மெட் சுக்குநூறாக உடைந்து சிதறிக்கிடந்தது குறிப்பிடத்தக்கது.