காஞ்சிபுரத்தில் சைவ பெருவிழா

காஞ்சிபுரத்தில் சைவ பெருவிழா

விழாவில் கலந்து கொண்டவர்கள் 

உலக சிவனடியார்கள் திருக்கூட்டத்தின் சைவ பெருவிழா காஞ்சிபுரம், பிள்ளையார்பாளையத்தில், சிவபூஜையுடன் துவங்கியது.

காஞ்சிபுரம் மாவட்ட, உலக சிவனடியார்கள் திருக்கூட்டத்தின் சைவ பெருவிழா காஞ்சிபுரம், பிள்ளையார்பாளையத்தில், நேற்று காலை 5:00 மணிக்கு சிவபூஜையுடன் துவங்கியது. வேலுார் முன்னாள் கலெக்டர் ராஜேந்திரன் தலைமை வகித்தார். தங்கதுரை சுவாமிகள் அருளாசி வழங்கினார்.

அடியார்க்கு அடையாளம் எது, என்ற தலைப்பில், மாநில ஆலோசகர் சிவகுமார் சொற்பொழிவாற்றினார். தொடர்ந்து திருமுறை விண்ணப்பம், திருக்கயிலாய வாத்தியத்துடன் பன்னிரு திருமுறை வீதியுலா, குரு ராகவேந்திரா நாட்டியாஞ்சலி குழுவினரின் பரதநாட்டிய கலைநிகழ்ச்சி,

மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா, மூத்த சிவனடியார்கள், ஒருங்கிணைப்பாளர்கள் கவுரவிக்கப்பட்டனர். அடியார்களுக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டது. மாவட்ட தலைமை ஒருங்கிணைப்பாளர் கண்ணன் வரவேற்றார். மாநில தலைமை ஒருங்கிணைப்பாளர் ஈஸ்வரன் நன்றி கூறினார்."

Tags

Next Story